உலகை ஆள வேண்டுமா உம்ரான் | ஜனவரி 22, 2023
ராய்ப்பூர்: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்தது. இதில் ஷமி, சிராஜ் உள்ளிட்ட இந்திய ‘வேகங்கள்’ அசத்தினர். ஷமி மூன்று விக்கெட் வீழ்த்த நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வென்றது. தொடரையும் 2–0 என கைப்பற்றியது. இரண்டு போட்டிகளிலும் பங்கேற்காத சக இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் உடன் ஷமி கலந்துரையாடினார்.
ஷமி கூறுகையில்,‘‘உம்ரான் நீங்கள் சிறப்பாக பந்துவீசுகிறீர்கள். இது அவ்வளவு எளிதானது இல்லை. ஆனால், சின்ன ‘அட்வைஸ்’ கூற விரும்புகிறேன். சரியான அளவில் பந்துவீசினால், நீங்கள் உலக கிரிக்கெட் அரங்கை ஆளலாம். சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது. இதே போன்ற திறமையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும். தேசத்திற்காக போட்டிகளில் விளையாடும்போது, எவ்வித நெருக்கடியையும் மனதுக்குள் ஏற்றிக்கொள்ள கூடாது,’’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
